எதிரணியின் பொது வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்கு கிடையாது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பூர்த்தி செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக அடிமட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி இணைப்பாளர்கள் உள்ளிட்ட சகலரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதுடன், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கொள்ளக் கூடிய பலம் யாருக்கும் கிடையாது: சுசில் பிரேமஜயந்த