Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசு அலுவலகங்களில் இருக்கும் ஜெயலலிதா புகைப்படத்தை அகற்ற ஒரு மாதத்துக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு, அவரது பதவி பறிபோன நிலையில் அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் மாட்டியிருப்பது சட்ட விரோதமாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு அம்மா உணவகங்கள், அம்மா குடி நீர் உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களிலும் ஜெயலலிதாவின் புகைப்படம் இன்னமும் அகற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

வழக்கு விசாரணையின்போது மனுதாரரின் கோரிக்கைக் குறித்து தமிழக அரசு இன்னும் ஒரு மாத காலத்துக்குள் வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to அரசு அலுவலகங்களில் இருக்கும் ஜெயலலிதா புகைப்படத்தை அகற்ற பரிசீலனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com