பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியார் ஜஷோதாபென் தனக்கான தனிப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் தெரிந்துகொள்வதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேசானா காவல்துறையினரிடம் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனக்கான பாதுகாப்பு காவல்துறையினர் குறித்து அவர் அதிருப்தியும் வெளியிட்டுள்ளார்.
உதாரணமாக ஜஷோதாபென் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் செல்லும் போது மத்திய அரசுக்கு சொந்தமான வாகனங்களில் அவரைப் பின் தொடர்கிறார்கள் அவரது தனிப்பட்ட பாதுகாவலர்கள்.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து ஜஷோதாபென்னுக்கு மேசானா காவல்துறை தமது 10 காவல்துறையினரையும், ஆயூதம் ஏந்திய விஷேட படையினரையும் அவரது பாதுகாப்புக்காக வழங்கியுள்ளது. மேசானா மாவட்டத்தின் உனிஜ்ஜா கிரமத்தில் தனது சகோதரர் அஷோக் மோடியுடன் வாழ்ந்து வருகிறார் ஜஷோதாபென்.
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய் பாதுகாவலராலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தினாலேயே தனது பாதுகாப்பு குறித்து தான் கரிசனை கொண்டதாக ஜஷோதாபென் தெரிவித்துள்ளார். மோடி விருப்பம் தெரிவித்தால் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக அண்மையில் ஜஷோதாபென் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to எனக்கான பாதுகாப்பு என்ன?: தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடியுள்ளார் மோடியின் மனைவியார்