Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைக் கட்சியினரான நாம் வேட்பாளர்களாக இருப்பதில்லை. மாறாக, வாக்காளர்களாகவே இருக்கின்றோம். எனவே, ஆறுதலாகவே ஆராய்ந்து முடிவை வெளியிடுவோம் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

தேர்தலொன்றில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத்தான் தங்களுடைய முடிவை அவசரமாக வெளியிட வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால், வாக்காளர்கள் எல்லாவற்றையும் அவதானித்த பின்னரே முடிவை எடுப்பார்கள். அவர்களுக்கு அவசரம் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும்- முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அது தொடர்பிலும், முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பிலும் வெளிநாட்டு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே ஹசன் அலி மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆளும்- எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தை கவனத்திலெடுத்து ஆராய்ந்து, இரண்டு தரப்புடனும் பேச்சுக்களை நடத்தி அதன்பின் கட்சியின் உயர்பீடம் கூடியே முடிவை அறிவிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் நாம் வேட்பாளர்களல்ல, வாக்காளர்களே; ஆறுதலாகவே முடிவு: முஸ்லிம் காங்கிரஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com