Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரான அமீர் அலி இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அமீர் அலி வெற்றி பெற்றிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.எச்.எம். அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அண்மையில் இராஜினாமாச் செய்திருந்தார். அவரின் இடத்துக்கே அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அமீர் அலிக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to பாராளுமன்ற உறுப்பினராக அமீர் அலி சத்தியப்பிரமாணம்: பிரதியமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com