புதுவை ஆஷ்ரமத்தில் தங்கியிருந்த இளம்பெண்களின் தற்கொலை எதிரொலியாக, மக்கள் புதுவை ஆஷ்ரமத்தில் கல்வீச்சு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
5 பெண் பிள்ளைகளுடன் கடந்த பல வருடங்களாகவே புதுவையில் உள்ள அரவிந்தர் ஆஷ்ரமத்தில் தங்கியிருந்த ஒரு குடும்பத்தை நேற்று போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்து அப்புறப் படுத்தியும் உள்ளதாகத் தெரிய வருகிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த குடும்பத்தினர் இன்று அதிகாலை 4 மணிக்கு புதுவை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளனர். இந்த முயற்சியில் ஒரு தாய் இரு மகள்கள் இறந்துவிட, தந்தையும் மூன்று மகள்களும் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பல வருடங்களாக அரவிந்தர் ஆஷ்ரமத்தில் இருந்த இந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்களுக்கு பாலியல் தொந்திரவுகள் வந்ததாக புதுவை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரில் உண்மை இல்லை என்று, புதுவை போலீசார் தெரிவித்ததாகவும், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றமும் கடந்த 16ம் திகதி புகாரில் உண்மை இல்லை என்று தீர்ப்பு அளித்ததாகவும் தெரிய வருகிறது.
பின்னர் இவர்களை குடும்பத்தோடு வெளியில் தங்க வைத்து இவர்களுக்கு ஆகும் செலவை ஆஷ்ரமம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டு இருந்ததாகவும் தெரிய வருகிறது. இதனை அடுத்து புதுவை போலீசார் இவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்தியதில், இன்று இவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.இதில் பரிதாபமாக மூவர் இறந்துள்ளனர் என்பதால், ஆத்தரமடைந்த மக்கள் ஆஷ்ரமம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

0 Responses to புதுவை அரவிந்தர் ஆஷ்ரம் மீது கல் வீச்சு: இளம்பெண்கள் தற்கொலை எதிரொலி