Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

 சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு, ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நால்வருக்கு பெங்களூரு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பு அளித்ததது. இந்நிலையில் இந்த ஜாமீனை மேலும் நீட்டிக்க நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து மனுவை விசாரித்தார். இந்த மனுவுடன் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வந்த நிலையில், நால்வரின் ஜாமீனையும் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்தனர்.

மேல் முறையீட்டு மனுவின் மீதான விவரங்களைத் தாக்கல் செய்ய ஜெயலலிதா தரப்பு 30 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்ட நிலையில், கர்நாடகா உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வு ஒன்றை நியமித்து, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர். எனவே, ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மேல் முறையீட்டு மனு திங்கட்கிழமைக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுவை மேலும் நீட்டித்து உத்தரவு:உச்ச நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com