பொது எதிரணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு விகாரமாதேவி பூங்கா திறந்த வெளி அரங்கில் கைச்சாத்திடப்பட்டது.
பொது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேனா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், சோபித தேரர் உள்ளிட்ட தலைவர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்:
1. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் இல்லாதொழித்தல்.
2. மக்களுக்கு பொறுப்பு கூறும் புதிய பாராளுமன்ற முறைமையை ஏற்படுத்தல்.
3. ஜனாதிபதி நாட்டின் தேசிய தலைவராக இருப்பதோடு தேவைக்கு ஏற்ப அதிகாரங்களும் பொறுப்புகளும் வழங்கப்படும்.
4. ஜனாதிபதி பதவியை நாட்டின் சின்னமாக பிரகடனம் படுத்தல்.
5. அரசியலமைப்பின் 18வது திருத்தத்தை இல்லாதொழித்தல்.
6. நீதி சேவை, பொலிஸ் சேவை, தேர்தல் முறைமைகள் மற்றும் கணக்காய்வாளர் நிர்வாகம் ஆகியன சுயாதீனமாக செயற்பட வழிவகுத்தல்.
7. விகிதாசார தேர்தல் முறைமையை இல்லாதொழித்து ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென பாராளுமன்ற பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்யும் வகையில் பழைய பாராளுமன்ற தேர்தல் முறைமையை ஏற்படுத்தல். (தொகுதி வாரி பிரதிநிதித்துவம்)

0 Responses to பேதங்களை மறந்து சவால்களை எதிர்கொள்வோம்; எதிரணிக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!