ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் ஆதரவு யாருக்குள்ளது என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்னவென்பதையும் கடந்த காலத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி வந்துள்ளதாகவும், அதனை அரசாங்கம் நன்றாகவே உணர்ந்து கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவித பேச்சுக்களிலும் ஈடுபடப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் நடத்தாது இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். நாம் அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
அதேபோல், வடக்கு மக்களின் எண்ணம் அவர்களின் ஆதரவு என்னவென்பது எமக்கு நன்றாகவே தெரிந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலமும் நம்பிக்கையும் எமது மக்களே இதை விளங்கிக் கொள்ளாத அமைச்சர்களின் நிலைப்பாடு தொடர்பில் நாம் கவலைப் படுகின்றோம்.
அரசாங்கத்தின் கூட்டு கட்சிகள் அரசாங்கத்திற்கு விலைபோன ஒரு சிலரை வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கின் மொத்த வாக்குளையும் வென்று விடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால், வடக்கின் ஆதரவு தமிழ் மக்களின் தெரிவு என்னவென்பதை கடந்த கால மாகண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளை அரசாங்கம் ஒரு முறை மீட்டுப் பார்க்க வேண்டும்.
அதேபோல், ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகசரியானதும் தமிழ் மக்களின் நன்மையினை கருத்திற்கொண்டுமே முடிவெடுக்கும். இவ்விடயத்தில் பெருமையாக தீர்மானிப்போம்.
மேலும், பொது எதிரணியின் செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பு படவில்லை. இன்று இடம்பெறவிருக்கும் பொது எதிரணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திலும் நாம் கலந்து கொள்ளவில்லை” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவினையே த.தே.கூ எடுக்கும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்