Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று!

பதிந்தவர்: தம்பியன் 24 December 2014

வாழ்நாளில் வெற்றி மீது வெற்றி கண்டு வாழ்ந்து வந்த எம்ஜிஆரின் 27வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

1917ம் ஆண்டு பிறந்த எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் எம்ஜி.ராமச்சந்திரன் 1987ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்தினம் காலமானார். புத்தன், ஏசு, காந்தி என்று அவர்களது கொள்கைகளை கடைப்பிடித்து வாழ்ந்துவந்த எம்ஜிஆர், வாழ் நாளில் வெற்றி மீது வெற்றிக் கண்டு வாழ்ந்தவர். திரையுலகில் முடிசூடா மன்னன், அரசியலில் அதிமுக என்று தனிக்கட்சி ஆரம்பித்து முடி சூடிய மன்னன் என்று அடுக்கடுக்கான வெற்றிகளுக்கு நாயகனாக வாழ்ந்து இன்னும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற அபூர்வத் தலைவர் எம்ஜிஆர்.

தமிழகம் முழுவதும் உள்ள எம்ஜிஆர் அபிமானிகள் அவரது படத்துக்கு பூஜை செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்னமும் கூட அவரது மறைவு தின துக்கத்தை அனுஷ்டித்து மொட்டை போட்டுக் கொள்ளும் வயோதிக ரசிகர்களும் மாரில் அடித்துக்கொண்டு புகைப்படத்தின் முன் அழும் வயோதிகப் பெண்களும் இருப்பதை கிராமங்களில் காணலாம்.

0 Responses to எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com