Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதாக இருந்தால் தேசிய மாநாட்டுக் கட்சி தற்கொலை செய்துக்கொள்வதாக அர்த்தம் என்று அக்கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பதுக் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க போதுமான பலம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், பாஜகவுடன் இணைந்து ஆட்சிப் பொறுப்பில் இணைய வாய்ப்புள்ளது என்றாலும், அப்படி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டால் தேசிய மாநாட்டுக் கட்சி தற்கொலை செய்துக்கொள்வதாக அர்த்தம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் இன்று தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது.

ஆனால் பாஜக தலைவர் அமித் ஷாவோ, காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி அல்லது மக்கள் ஜனநாயக கட்சி என்று எந்தக் கட்சியுடனும் இணைந்து ஆட்சி அமைக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

0 Responses to பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பது தற்கொலைக்கு சமம்: உமர் அப்துல்லா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com