நாட்டில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் மக்களுக்கு சுதந்திரமும், சமாதானமும் கிடைக்கவில்லை என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நத்தார் திருப்பலியை ஒப்புக் கொடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் ஆயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அன்பும், அமைதியும் இலங்கைக்கு மட்டுமல்ல உலகுக்கும் தேவைப்படுகின்றது என்பதை இன்றைய கிறிஸ்து பிறப்பு எமக்கு தெரிவிக்கின்றது. இலங்கையில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் நாட்டுக்கும் எமது மக்களுக்கும் இன்னும் சுதந்திரம், சமாதானம் கிடைத்ததாக இல்லை.
யாழ் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தியை சந்தித்து கலந்துரையாடிய போது, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 5,000 வீடுகளே தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பது தொடர்பிலும், வடக்குப் பகுதிகளில் வியாபித்திருக்கும் இராணுவப் பிரசன்னம் காரணமாக மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் இல்லாத நிலை குறித்தும் விவாதித்திருந்தோம்.
இவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தலை நாம் சந்தித்திருக்கின்றோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதொரு தலைமைத்துவம் இன்று தேவைப்படுகின்றது. இதற்காக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டும். நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய தலைவர்கள் இன்று எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to போர் முடிவுற்றும் மக்களுக்கு சுதந்திரமும், சமாதானமும் கிடைக்கவில்லை: இராயப்பு ஜோசப்