Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக கடலோரங்களில் சுனாமி வந்ததன் 10ம் ஆண்டு நினைவு தினத்தை பாதிக்கப்பட்ட மக்கள் சோகத்துடன் அனுஷ்டித்து வருகின்றனர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி காலை 8 மணி அளவுக்கு சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை கோரதாண்டவம் ஆடி,ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை இழுத்துச் சென்றது.அப்போதுதான் தமிழகத்தில் பலரும் சுனாமி என்றால் என்ன என்பதை அறிய நேர்ந்தது.

சென்னையில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் சுனாமியால் தமது உற்றார் உறவினர் பிள்ளைகள் என்று பலரையும் இழந்த மக்கள் சேர்ந்து இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நாகை, கன்னியாகுமரியில் சுனாமியால் உறவினர்களை இழந்தவர்கள் அங்குள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனையும் செய்தனர்.நேற்று கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடிய மக்கள் இன்று ஆழ்த்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

0 Responses to சுனாமி வந்ததன் பத்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com