ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னர், அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தமது தேர்தல் நிலைப்பாட்டினை வெளியிட முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மீண்டும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கூட்டமொன்று வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “அப்படி ஏதும் இல்லை. ஆனால், தேர்தலில் மக்களை முழுமையாக வாக்களிக்கக் கோருகின்றோம். அது, ஜனநாயக உரிமை” என்றார்.
இதனிடையே, மருத்துவ சோதனைகளுக்காக இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவு வெளியிடப்படும் என்று மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த - மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்குப் பின்னரே இறுதி முடிவு: மாவை சேனாதிராஜா