வடக்கு மாகாண மக்களாகிய நாம் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம் மற்றும் இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் திறப்பதற்கான கோரிக்கையை வைத்த போது முன்னாள் சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேன மறுப்பின்றி உடனடியாக எமது ஒதுக்கீட்டை கேட்டு 8.5 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கியிருந்தார்.
அவர் இன்று சுகாதார அமைச்சராக இல்லாவிட்டாலும் எமது மாகாண மக்கள் அவருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம். நானும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதன்முதலாக சிறுநீரக குருதி சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைக்கின்றோம். இலங்கையில் அனுராதபுரத்திற்கு அடுத்ததாக சிறுநீரக நோயாளர்களை கூடுதலாக கொண்ட ஒரு மாவட்டமாக வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது. அடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.
ஆகவே நாங்கள் வவுனியா வைத்தியசாலையில் இவ்வாறான சிகிச்சை நிலையத்தை அமைப்பதன் மூலம் குறிப்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுநீரக நோயாளர்கள் இவ் வைத்தியசாலையில் இருந்து பயன்பெறக்கூடியதாக உள்ளது” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்