Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை வீட்டிலேயே சிறை வைத்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

2013ஆம் ஆண்டு முதல் தனக்கு சம்பளமோ அல்லது எந்தவொரு கொடுப்பனவோ வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு விசாரணைக்காக நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக புதுக்கடைக்கு வந்திருந்தபோது ஷிராணி பண்டாரநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் என் நாட்டுக்காக 32 வருடங்கள் சேவை செய்துள்ளேன். இந்தக் காலப் பகுதியில் என் மீது எந்தவொரு முறைப்பாடோ குற்றச்சாட்டோ முன்வைக்கப்பட்டதில்லை.

2013 ஜனவரி மாதம் முதல் என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர். என்னுடைய கடவுச்சீட்டை முடக்கி வைத்துள்ளனர். எந்தவொரு கொடுப்பனவோ ஓய்வூதியமோ வழங்கப்படவில்லை. நான் நினைக்கிறேன் 32 வருட காலமாக மனதை ஒருநிலைப்படுத்தி நீதியின் படி நான் ஆற்றிய சேவைக்காக எனக்கு வழங்கப்படும் ஊதியமே இது. ஆனாலும், நீதி நிலைநாட்டப்படும் என்று நம்பிக்கையுள்ளது” என்றுள்ளார்.

0 Responses to என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர்: ஷிராணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com