பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துவிட்டது. ஆனாலும், முடிவை அறிவிக்காமல் காலம் கடத்தி வருகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தீர்மானத்தை வெளியிட்டால், பொது எதிரணிக்கு தெற்கில் வாக்கு கிடைக்காது என்பதாலேயே முடிவை அறிவிக்காமல் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொது எதிரணியிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மைத்திரிக்கு ஆதரவளிக்க த.தே.கூ தீர்மானித்துவிட்டது: டிலான் பெரேரா