Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஒரே நாளில் 4 இடங்களில் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 11 பேர் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்திருந்தனர். இத்தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி செய்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ்கண்ட் மாநிலத்தின் 3 வது கட்டமாக டிசம்பர் 9ம் திகதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராஞ்சிக்கு சிறப்பு விமானம் மூலம் காலை 10 மணிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹசாரிபாக் தொகுதியில் உள்ள மட்வாரில் பிரச்சாரம் செய்த போது இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த ஜார்கண்ட் வீரர் சங்கல்ப் குமார் சுக்லாவின் தியாகம் போற்றுதலுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இத்தாக்குதலில் தீவிரவாதிகள் தரப்பில் லஷ்கர் இ தொய்பா தளபதி என கருதப்படும் இஸ்ரார் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் : நரேந்திர மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com