Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்திலிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றிருந்தது. 65 வருடமாக இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டியும்,

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு தனது விசாரணையை முழுமைபெற வன்னிசென்று தமிழினப் படுகொலை செய்யப்பட்ட இடங்களை பார்வையிடுவதுடன,; அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியான சாட்சியங்களைப் பெற்று, தமிழின அழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுpயுறுத்தியும், எமது விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை விடுதலை அமைப்பாக ஏற்று தமிழர்களுக்கு நிரந்தர தீர்வான தமிழீழத்தைப் பெற்றுத் தரக் கோரியும், கடும் மழை, குளிர் காற்றென்றும் பாராது 100க்கணக்கான மக்கள் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் நடாத்தியிருந்தனர்.

கவனயீர்ப்பு நிகழ்விற்கு ஸ்ராஸ்பூர்க் நகர பிதாவும் பிரஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர் அர்னோல்ட் யுங் அவர்களின் உதவியாளர் எறிக் எல்குபி அவர்களும் கலந்து கொண்டு பிரஞ்சுப் பாராளுமன்றத்திலும் எமது நிரந்தர தீர்வு பற்றி வலியுறுத்துவதாகவும், மோசமான காலநிலையிலும் தேசத்தின் விடுதலைக்காக 100க் கணக்கான மக்கள் கலந்து கொண்டதையிட்டும் பாராட்டும் தெரிவித்துச் சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தென் ஆசிய குழுத் தலைவி ஜின் லம்பேர் அவர்களும் கவனயீர்ப்புக்கு நேரில் வந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய நிலைப்பாடுபற்றியும் தமிழர்களின் நிரந்தர தீர்வுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அயராது உழைப்பதாகவும் அடுத்த வருடத்தில் தமிழ் மக்களுக்கு நல்ல செய்தி கிட்டும் எனவும் உறுதியளித்ததுடன், ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தினால் கையளிக்கப் பட்ட மனுவையும் பெற்றுச் சென்றிருந்தார்.

இதேவேளை ஐரோப்பியத் தமிழர் ஒன்றிய சார்பில் இன்றைய தினம் (17.12.2014) காலை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அச் சந்திப்பின் போதும் தமிழினப்படுகொலைக்கு நீதி கிடைக்க ஐரோப்பிய ஒன்றியம் பாடுபட வேண்டும் எனவும் தமிழீழத்தை அங்கீகரித்து தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக தாமும் பாடுவதாக உறுதி அளித்ததுடன் ஐரோப்பிய வாள் அனைத்து தமிழ் மக்களும், தாம் வாழும் பகுதிகளில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி, தமிழரின் நிரந்தர தீர்வு தனித் தமிழீழம் என்பதை வலியுறுத்துமாறும் ஆலோசனை கூறியிருந்தனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

0 Responses to தமிழ் மக்களுக்கு நிரந்தரத்தீர்வு தனித்தமிழீழம் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றில் நடைபெற்ற கவனயீர்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com