Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றும், நாளையும் (டிசம்பர் 23, 24) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு அரச ஊழியர்களிடம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் இறுதி முடிவை அறிக்காத நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார்.

சமூகம் மற்றும் கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உரிமைகளையும் முதன்மைப்படுத்தி, 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்குப்பதிவின் போது வாக்குபதியுமாறு கோருகின்றோம் என்று ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மனச்சாட்சியின்படி வாக்களியுங்கள்; தபால் மூல வாக்காளர்களிடம் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com