Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கின்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினரை வரவேற்பதற்காக பாரத தேசமே தயாராகிக் கொண்டிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடிய போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது நரேந்திர மோடி, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு தனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்து கொண்டுள்ளார்.

1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை கைப்பற்றியது போல, இம்முறையும் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு முடியவேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்திய பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவில், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

0 Responses to மைத்திரியின் வருகைக்காக இந்தியா காத்திருக்கிறது: நரேந்திர மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com