Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் அமைதியைக் கட்டுயெழுப்புவதற்காக ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்பும், திட்டங்களும் தொடரும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோர் இலங்கையின் மனித உரிமை விவகாரம், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவது குறித்து விவாதித்தனர்.

இதன்போது, இலங்கையின் புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தை வரவேற்ற பான் கீ மூன், புதிய அரசுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார். இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக ஆராய்ந்தனர். ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் ‘சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்’ திட்டத்தை இலங்கையிலும் தாம் முன்னெடுப்பர் என பான் கீ மூன் குறிப்பிட்டார்.

இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய நாடுகளின் திட்டங்கள் தொடரும் என்றும், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஐக்கிய நாடுகளின் உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் பான் கீ மூன் உறுதியளித்துள்ளார்.” என்றுள்ளது.

0 Responses to இலங்கையில் அமைதியைக் கட்டுயெழுப்ப ஐ.நா. உதவும்; மங்களவுடனான சந்திப்பில் பான் கீ மூன் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com