இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது இனப்படுகொலைகளே என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டமை தமிழ் மக்களின் உணர்வு வெளிப்பாடு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட முதலமைச்சர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் குறித்து சந்திப்பின் போது ஆராயப்பட்டது. இந்த முதற்கட்ட சந்திப்பின்போது இந்திய இலங்கை மீனவர்கள் விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டது.
வடக்கு பகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதன் காரணமாக எமது மீனவர்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் போது இருநாடுகளினதும் கூட்டு ரோந்தின் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளோம். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட வேறு பலரும் எனது யோசனையை ஏற்றுக்கொண்டனர்.
இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்ப்பார்க்கின்றோம். இலங்கை கடற்பரப்பில் ட்றோலர் வகை படகுகளை தடைசெய்யவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளோம். முன்னைய காலங்களில் இது போன்ற அத்துமீறல்கள் இடம்பெறுவதில்லை. தற்போதே இந்திய, தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர்.
மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து விரைவில் நடவடிக்க எடுக்கவேண்டும். இல்லையேல் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர்கள். இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்தார்.” என்றுள்ளார்.

0 Responses to இனப்படுகொலை தொடர்பிலான தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வு வெளிப்பாடு