மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை, அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிகிறது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தேசிய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
பிரசன்ன ரணதுங்கவை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ரஞ்சித் சோமவங்சவை அப்பதவிக்கு நியமிக்குமாறு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதனிடையே, அண்மையில் நுகேகொடவில் இடம்பெற்ற ‘ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்மொழிக’ என வலியுறுத்தும் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி பிரசன்ன ரணதுங்க கலந்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை நீக்க முயற்சி?