வாடகை சோஃபா இருபது ரூபாய் விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய் என்கிற ரீதியில் தமிழக அரசு தனியார் துறையிடம் மின்சாரத்தை வாங்கி, தமிழகத்தின் கஜானாவை காலி செய்து வருகிறது என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ராமதாஸ், தமிழக அரசின் மீது பல்வேறுக் குற்றச்சாட்டுக்களை எடுத்து வைத்தார். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று அதிமுக அரசு கூறியது. ஆனால் இன்னமும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டுத்தான் நிலவி வருகிறது என்று கூறியுள்ளார்.
அதோடு சிலர் லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே தனியாரிடம் தமிழக அரசு அதிக விலைக் கொடுத்து மின்சாரத்தை வாங்கி வருகிறது.இதனால் தமிழக அரசின் கஜானாவே காலியாகிவிடும் போல இருக்கிறது என்று கூறிய அவர், வாடகை சோஃபா இருபது ரூபாய், விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய் என்பதற்கேற்ப முன் யோசனை இல்லாத அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

0 Responses to வாடகை சோஃபா இருபது ரூபாய் விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய்: ராமதாஸ்