Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் முழுமையாக உள்வாங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.

இதன்போக்கில், சில நிபந்தனைகளுடன் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கு சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, தேசிய அரசாங்கத்தில் புதிய அமைச்சுக்கள் சில உருவாக்கப்படவுள்ளதுடன், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளது. இதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு சுதந்திரக் கட்சி முன்னதாக தீர்மானித்திருந்தாலும், தற்போது 10 நிபந்தனைகளுடன் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாற்றம்செய்யப்பட்டாலும், பாதுகாப்பு, காணி அதிகாரம், மாகாண சபைக்குரிய விடயதானங்கள் ஆகியன ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டும் என்பது உட்பட 10 நிபந்தனைகளே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி இணையவுள்ள நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 45 ஆக உயரவுள்ளது. புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாம்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கு சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளதால், பாராளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் தன்னுடைய 100 நாட்கள் திட்டத்தை பூர்த்தி செய்ததன் பின்னர், ஏப்ரல் 23ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கத்தில் பங்கெடுக்க இணங்கியுள்ளதால் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

0 Responses to தேசிய அரசாங்கத்தில் பங்கெடுக்க சுதந்திரக் கட்சி இணக்கம்; தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com