Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர (போர்ட் சிற்றி) திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

ஆனாலும், இந்த அறிவிப்பால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இறுதி முடிவு இன்னமும் எட்டப்படவில்லை. ஆராய்வதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு பாராளுமன்றில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, குறித்த திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார். எனினும், உள்ளூர் பல்கலைக்கழகம் நடத்திய சுற்றுச் சூழல் ஆய்வின் பிரகாரம் குறித்த திட்டத்தை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to கொழும்பு துறைமுக நகர (போர்ட் சிற்றி) திட்டம் கைவிடப்பட வேண்டும்: ஜே.வி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com