Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிமாறு தனக்கு எந்தவிதமான அழைப்புக்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று முன்னாள் ஜனாதிபதி பார்வையிட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான், திஸ்ஸ அத்தநாயக்க, பிரேமலால் ஜயசேகர ஆகியோரை பார்வையிடுவதற்கே வருகை தந்தேன். ஜயசேகரவை குருவிட்ட சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுவிட்டனர். திஸ்ஸவை பார்த்தேன்.

பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனக்கு அதுதொடர்பில் எதுவுமே தெரியாது. எங்கே கூட்டம் நடைபெறுகின்றது என்றும் எனக்கு தெரியாது. கிராமத்திலிருந்து நான் இன்றுதான் வந்தேன்.” என்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் இடதுசாரி முன்னணி ஆகியன இணைந்து கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

0 Responses to பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com