ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பணம் கொடுக்கவே முதல்வர் ஸ்ரீரங்கம் வந்தார் என்று, பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்றுள்ள தமிழிசை சவுந்திரராஜன், அதிமுக பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவது தெரிந்துதான் தேர்தல் அதிகாரி, அதிக சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளார் என்று கூறியுள்ளார். அதோடு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை,பணம் கொடுத்து நிவர்த்தி செய்யவே தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஸ்ரீரங்கம் வந்துள்ளார் என்று அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அதோடு, 9 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. எனவே, தேர்தல் ஆணையமும் அதிமுகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது என்று மேலும் குற்றச்சாட்டு வைத்துள்ளார் அவர்.

0 Responses to பணம் பட்டுவாடாவுக்கு பணம் கொடுக்கவே முதல்வர் ஸ்ரீரங்கம் வந்தார்: தமிழிசை