மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை முற்றாகவே அழித்திருப்பார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜா மேலும் கூறியதாவது, “மஹிந்த ராஜபக்ஷவின் வரவு – செலவுத் திட்டத்தில் இரணைமடுவுக்கு பக்கத்தில் 10 ஆயிரம் இராணுவ வீரர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்க ஒதுக்கீடு செய்தார்கள். 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படுவதன் மூலம் 50 ஆயிரம் பேரை அங்கே குடியமர்த்த முயன்றார்கள்.
பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகளை கட்டுகின்றார்கள். விகாரைகள் கட்டுவதற்காக எங்கள் கோயில்களை இடிகின்றார்கள். இதன்மூலம் தமிழர்களின் தனித்துவம் தேசியம் என்பவற்றை இல்லாது அழித்து ஒழிக்க முயல்கின்றார்கள்.
அதற்காவே 1 இலட்சம் இராணுவத்தினரை தமிழர் பிரதேசங்களில் நிலை நிறுத்தினார்கள். அதன் மூலம் தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்குவதே ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் திட்டமாக இருந்தது.
தமிழ் மக்களுக்கு சொந்தமான நகைகளை வன்னியிலிருந்து மூன்று பெரிய கொள்கலன்கள் மூலம் (கெண்டெயினரில்) எடுத்து சென்றுவிட்டு, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் அதில் 100 பேரின் சிறிய தொகை நகையை கையளித்தனர்.
முன்னர் இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கூறினார், தான் மட்டும் 200 கிலோ தங்கத்தை கையளித்ததாக. தமிழ் மக்களுக்கு சொந்தமான நகைகள் எல்லாம் தற்போது எங்கே என தெரியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் இறுதி வரவு - செலவுத்திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு இராணுவத்துக்காக ஒதுக்கி இருந்தார்கள். அப்போது நான் பாராளுமன்றில் யுத்தத்தில் வாழ்விழந்தவர்கள், வீடு இழந்தவர்களுக்கு நிதி ஒதுக்காமல் இராணுவத்தினருக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பில் பேசினேன்.
அதன் பிறகு நான் அமர்வு முடிந்து வெளியேறிய போது, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ என்னை மறித்து சொன்னார், கடைசியில் நீங்கள் என்னையும் தாக்க தொடங்கிட்டீங்களே என்று. அதற்கு நான் சொன்னேன் உங்களை நான் தாக்கவில்லை வாழ்விழந்தவர்கள், வீடு இழந்தவர்களுக்கு நிதி ஒதுக்குங்கள் என்றே கேட்டேன்.
கடந்த ஆட்சி காலத்தில் நாங்கள் எங்கள் நிலத்தைக் கேட்டுப் போராடினோம். காணாமற்போனவர்களை மீட்கப் போராடினோம். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி போராடினோம். அந்த போராட்டங்களை நசுக்க முயன்றார்கள்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உளவாளிகள் மற்றும் அவர்களின் அடியாட்கள் போராட்டம் நடத்தியவர்களை அச்சுறுத்தினார்கள். தாக்குதல் நடத்தினார்கள். பெண்கள் மீதும் தாக்குதலை தொடுத்தார்கள். வீடுகளை உடைத்தார்கள். வாகனங்களை உடைத்தார்கள். கழிவு எண்ணெய் வீசினார்கள். கற்களை வீசினார்கள்.
அப்போது வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி ஒரு போர்க்குற்றவாளி. யுத்தம் நடைபெற்ற வேளை, அவர் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தவர். அவரையே ராஜபக்ஷ ஆளுநராக நியமித்து இருந்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி மீண்டும் அவரையே ஆளுநராக நியமித்தார். இந்த செயல்கள் எல்லாம் ஒரு மோசமான ஆட்சியில் தான் நடந்தேறியது.
ஆட்சியை மாற்ற வேண்டும் என நாங்கள் தீர்மானிக்க முதல் தமிழ் மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அதனால் தான் நாங்கள் அறிவிக்க முதலே ராஜபக்ஷவுக்கு எதிராக தபால் மூலம் வாக்களித்து விட்டார்கள். நாங்கள் சில தந்திரோபாயமான நடவடிக்கை காரணமாகவே தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவித்தோம்.
தமிழ் மக்கள் ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம், சிங்கள மக்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் இன்னமும் தமிழ் மக்கள் அதனை அனுபவிக்கவில்லை.
கடந்த ஆட்சியாளர்களின் ஊழல்கள் விசாரிக்கப்பட்டு தங்களுக்கு பிரச்சினை வரபோகின்றது என்பதற்காக இந்த ஆட்சியை தகர்க்க முற்படுகின்றார்கள். தமிழ் மக்கள் அளித்த வாக்கினாலையே மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றார்.
நாட்டில் மலையகம் உட்பட எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்களோ அங்கு எல்லாம் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து அளித்த வாக்கினாலையே வெற்றி பெற்றார். இதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இராணுவ ஆக்கிரமிப்பை முற்றாக அகற்ற வேண்டும். நாளைய தினமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம். அப்போதும் நாம் இதனை வலியுறுத்துவோம்.
இரண்டு ஆட்சி காலத்திலும் தமிழ் மக்களின் தனித்துவத்தையும் தேசியத்தையும் அழிக்க முயன்ற மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால் இன்னமும் எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்து முற்றாக அழித்து ஒழித்து இருப்பார் என்பதை தேர்தலை புறக்கணிக்க கோரியவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக ஒன்றிணைந்து அளித்த தீர்ப்பினாலையே இந்த மாற்றம் ஏற்பட்டது” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழர்களின் தனித்துவத்தை முற்றாக அழித்திருப்பார்: மாவை