Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு பகுதியில் எதிர்காலத்தில் இராணுவ முகாம்களை அமைக்கும் எண்ணம் ஏதும் அரசாங்கத்திடம் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு பகுதியில் இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள தனியார் காணிகள் தொர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும், சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் முழுமையான விபரங்கள் திரட்டப்பட்டு, அவை என்ன நோக்கத்தின் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்ற காரணங்களையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to வடக்கில் எதிர்காலத்தில் இராணுவ முகாம்களை அமைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com