ஆம் ஆத்மியின் இமாலய வெற்றி என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு மைல்கல் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மூத்தத் தலைவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கருணாநிதி, கெஜ்ரிவாலுக்கு மக்கள் கொடுத்துள்ள வெற்றி என்பது இந்திய ஜனநாயகத்தின் மைல்கல் என்று கூறியுள்ளார்.
மேலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மேலும் அர்விந்த் கெஜ்ரிவால் புகழ் பெற தாம் வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to ஆம் ஆத்மியின் வெற்றி இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு மைல்கல்: கருணாநிதி