கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஹாபிஸ் நசீர் அஹமட் சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) பதவியேற்றுள்ளார்.
திருகோணமலையிலுள்ள ஆளுநர் இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையிலேயே அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து, கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் ஏற்பட்டது.
ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்- முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையில் ஆட்சியமைப்பது தொடர்பில் இறுபறி நீடித்தது. இதனையடுத்து, மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைத்துள்ளது.
இதன்பிரகாரம், புதிய முதலமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாண சபைக்கு தெரிவான முஸ்லிம் காங்கிரஸின் ஹாபிஸ் நசீர் அஹமட் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

0 Responses to கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட் பதவியேற்றார்!