இனி ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இன்று டெல்லி முதல்வராக பதவி ஏற்றுகொண்ட அர்விந்த் கெஜ்ரிவால், பதவியேற்புக்குப் பின்னர் உரையாற்றினார்.சுமார் ஒரு லட்சம் பேர் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொண்டனர்.டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அர்விந்த் கெஜ்ரிவால்மற்றும் 5 அமைச்சர்களுக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பீட்டுப் பிரமாணமும் செய்து வைத்தார். எந்தெந்த அமைச்சர்களுக்கு எந்தெந்த இலாகா என்பது இன்னமும் ஒதுக்கப்படவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.
முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட கெஜ்ரிவால், ஊழலற்ற மாநிலமாக டெல்லியை மாற்றுவேன் என்றும், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் லஞ்சம் பெறுவது தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும்:அர்விந்த் கெஜ்ரிவால்