Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் பின்னரான இலங்கையின் பொறுப்புக் கூறும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில், தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய (Truth and Reconciliation Commission) ஆலோசனைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது.

வெள்ளையர்களின் இன ஒடுக்கல் ஆட்சிக் காலத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி உண்மையை கண்டறிவதனால் நாட்டில் பகைமை மறைந்து நல்லிணக்கம் உருவாக உதவுவதற்கென தென்னாபிரிக்கா, 1995ஆம் ஆண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவியது.

இலங்கை – தென்னாபிரிக்கா கருத்தாடல் களத்துக்கு சமாந்தரமாக தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார மற்றும் ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் நெமெய்ன்டியா, இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேராவுடன் நேற்றுமுன்தினம் வியாழனன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, இன ஒடுக்கல் முடிவுக்கு வந்த பின்னர் தென்னாபிரிக்காவின் அனுபவத்திலிருந்து விளக்கம் பெறும் சாத்தியம் பற்றி பேசப்பட்டது. பொறுப்புக் கூறுதல் பிரச்சினை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளை கையாள்வதற்கான ஒரு பொறிமுறையை ஆக்கிக்கொள்ளும் செயல்முறை அரசாங்கத்திடம் உள்ளதென பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா கூறியுள்ளார். இவ்வாறானதொரு பொறிமுறை சர்வதேச சமூகத்துக்கும் ஏற்புடையதாகவும் நம்பகமாகவும் அமையுமென அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் இது தொடர்பாக முயற்சிகளைத் தொடங்கியது. இந்த விடயம் தொடர்பாக தென்னாபிரிக்கா அரசாங்கம் விசேட தூதுவராக பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோஷவை நியமித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய ஆலோசனைகளைப் பெற இலங்கை முயற்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com