Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ‘இரு தேசம் - ஒரே நாடு’ என்பதே இலக்கு: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ‘இரு தேசம்- ஒரே நாடு’ என்ற எமது கொள்கையை அடைய கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்து வாழும் உறவுகளையும்- தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த தேசிய மாநாடு யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் இறுதியில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையாவன:

01. சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம்- ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம்.

02.தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பெரும் இன அழிப்புக்கு எதிராகச் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தக்கோரி, எமது செயற்கபாடுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெருமளவில் முன்னெடுத்தல்.

03. காணாமற்போனவர்கள், அரசியல் கைதிகள் என்பவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், நில அபகரிப்புக்கு எதிராகவும் பன்முகப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்.

04. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியப் பேரவையை நிறுவி, தமிழ் மக்களை நிர்வகிக்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவோம்.

05. போரினால் பாதிக்கப்பட்ட அவயவங்களை இழந்தவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பப் போராடுவோம்.

06. புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களின் பேராதரவுடன் வடக்கு கிழக்கில் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதற்கு எமக்கான பொருளாதாரக் கொள்கையை வகுத்துச் செயற்படுவோம்.

07. எமக்கான கல்விக் கொள்கை, விளையாட்டுக்கொள்கை, கலை- பண்பாட்டுக் கொள்கை, சுகாதாரக் கொள்கை என்பவற்றை உருவாக்கி முன்னெடுப்போம்.

0 Responses to சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ‘இரு தேசம் - ஒரே நாடு’

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com