ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் அனுமதியின்றி வேறு கட்சிகளின் மாநாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்ட விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “எமது நடவடிக்கைகளை பலமற்றவையாக்கும் திட்டத்தில் பல்வேறு பிற்போக்கு சக்திகள் முயற்சித்து வருகின்றன. முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்துக்கொண்டு கூட்டணியாக எதிர்வரும் காலத்தில் செயற்படுவோம்.
அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் அரசியல் கூட்டங்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதியின்றி அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், தங்களது தனிப்பட்ட கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்வைக்கவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்புக்களில் அவர்கள் பங்கேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளது.

0 Responses to சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சிகளின் மாநாடுகளில் பங்குபற்றுவதற்கு தடை: அநுர பிரியதர்ஷன யாப்பா