Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் செயற்பாடுகளைக் குற்றஞ்சாட்டும் வாசகங்களுடன் யாழ்ப்பாணத்தின் கரவெட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உருவப்பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் மக்களின் புண்பட்ட நெஞ்சுகளில் வேலைப் பாய்ச்சாதே, தமிழரின் துரோகியே தமிழரின் தியாகங்களை மறந்து நன்றி கெட்டவனே..” உள்ளிட்ட வாசகங்களை உள்ளடக்கியதாகவே அந்த உருவப்பொம்மைகள் கட்டப்பட்டிருந்தன. இந்த செயலுக்கான உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர்கள் என்று கோராப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமற்போனவர்களை மீட்கக்கோரும் போராட்டமொன்றில் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்பொம்மை சிலரினால் எரியூட்டப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கோசங்களுடம் யாழில் உருவப் பொம்மைகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com