இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாரணைகளின் அறிக்கை இந்த மாதம் (மார்ச்) வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமை கவலையளிக்கின்றது. ஆனாலும், அந்த அறிக்கை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் போது வலுவான ஆதாரங்களைக் கொண்டதாக இருக்கும் என்று தாம் நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உள்ளக அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கொழும்பில் நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா, பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போதே, ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

0 Responses to ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு கவலையளிக்கிறது: ஐ.நா. பிரதிநிதியிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு!