இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் கூட வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அரசினால் கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடிக்காமல் தடுக்கப்படவேண்டும் என சர்வதேச ஊடக கூட்டமைப்பு (IFJ: International Federation of Journalists) வலியுறுத்தியுள்ளது.
யாழ். குடாநாட்டுக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்த சர்வதேச ஊடக கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான அவுஸ்திரேலியாவின் கிரிஸ்தோமர் வாரென், அமெரிக்காவின் ஸ்கெற் சிறிமென் மற்றும் இந்தியாவின் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
அதன் பின்னர் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச ஊடக கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னரான காலப்பகுதியில் வெளிப்படையான வன்முறைகள் இல்லையென சகல ஊடகவியலாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தண்டணையின்மை குறித்த கவலைகள் காணப்படுகின்றன. வடக்கில் 2000மாம் ஆண்டிலிருந்து 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காணாமற்போயுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இதற்கான பொறுப்பு கூறப்படவில்லை சீர்திருத்த நடைமுறையின் பகுதியாக திறந்த விசாரணைகள் நடத்தப்படவேண்டியது அவசியமாகும். பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்துவதில் ஏற்கக்கூடிய வகிபங்கினை ஊடக அமைப்புக்கள் இனங்காண வேண்டும்.
இதேவேளை, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் காணாமற்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ். ஊடக அமையத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சர்வதேச ஊடக அமைப்புக்களுக்கும் வலியுறுத்தி வருகின்றோம். 100 நாள் புதிய அரசின் திட்டத்தின் கீழ் கட்டுப்பாடற்ற ஊடகம், மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கடும் கண்காணிப்பு, நெறிப்படுத்தல், ஆகியவற்றினையும் உள்ளடக்க வலியுறுத்துவோம்.” என்றுள்ளனர்.

0 Responses to வடக்கு ஊடகவியலாளர்களை இலங்கை அரசு தொடர்ந்தும் கண்காணிக்கின்றது: சர்வதேச ஊடக கூட்டமைப்பு