டெல்லி பாலியல் பாலாத்கார வன்கொடுமையில் உயிரிழந்த நிர்பயா குறித்த ஆவணப்படத்திற்கு சிறையில் இருக்கும் குற்றவாளியை சந்தித்து நேர்காணல் எடுக்க நான் அனுமதி தரவில்லை என்று, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
BBC 4 நிறுவனம் டெல்லி திஹார் சிறையில் இருக்கும் பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளியான ஓட்டுனரை சந்தித்து எப்படி, அனுமதி வழங்கியது யார் என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இது கடந்த 2012ம ஆண்டு டிசம்பர் மாதம் 16ம திகதி நடந்த குற்றம் என்பதால், அப்போது இருந்தவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த காங்கிரசை சேர்ந்த சுஷில்குமார் ஷிண்டே.
ஆனால், இந்த வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட ராம் சிங் என்கிற பேருந்து ஓட்டுனரிடம் பிரிட்டன் தொலைகாட்சி நேர்காணல் செய்துள்ளது. அதில் ராம்சிங், நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றும் பெண்களுக்கு பாடம் கற்பிக்கவே நான் இப்டி செய்தேன் என்று கூறியதாகத் தெரிய வருகிறது. மேலும் நாட்டில் 20 சதவிகிதம் பெண்கள் மட்டுமே நல்லவர்கள் என்றும் ராம்சிங் கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராம்சிங்கை சிறையில் சந்திக்க யார் அனுமதி அளித்தார்களோ தெரியாது. ஆனால், அந்தப் படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.
இதுக்குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஷிண்டே, நான் அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோதும் பிரிட்டன் தொலைகாட்சி ஊழியர்கள் திஹார் சிறையில் இருந்த குற்றவாளியை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை.மேலும், ராஜ்நாத் சிங்கும் எனது பெயரைக் குறிப்பிட்டு எதுவும் புகார் கூறவில்லை. எனவே, யார் அனுமதி அளித்தார்கள் என்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

0 Responses to நிர்பயா ஆவணப்படத்திற்கு சிறையில் இருக்கும் குற்றவாளியை சந்தித்து நேர்காணல் எடுக்க நான் அனுமதி தரவில்லை: ஷிண்டே