Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இருநாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்ஷங்கர் இரண்டு நாள் சென்றுவிட்டு இன்று நாடு திரும்புகிறார். இந்நிலையில் இரு நாட்டு நட்புறவை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்த நாள் குறிக்க பாகிஸ்தான் சென்றார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் சிறையில் 335 தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்திய சிறையில் 476 பாகிஸ்தானியர்கள் இருக்கிறார்கள் என்றும், இவர்களை விடுவிக்க மத்திய அரசும், இந்தியர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இருநாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: சுஷ்மா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com