கடந்த ஒரு வருட காலமாக பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவியான ஜெயக்குமாரி பாலேந்திரனை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒப்பமிடவேண்டும். எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடனேயே கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலருக்கு புகலிடம் வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஜெயக்குமாரி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் அவர் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜெயக்குமாரிக்கு பிணை வழங்குமாறு கடந்த 06ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிவான் மார்ச் 10ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அத்துடன் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
அந்த மனு மீதான சட்டமா அதிபரின் அறிக்கை இன்று பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு ஜெயகுமாரியை நீதிவான் பிணையில் விடுவித்தார். இதேவேளை, ஜெயக்குமாரின் மகள் விபூசிகா நீதிமன்ற உத்தரவுக்கமைய கிளிநொச்சி ஜெயந்திநகரிலுள்ள சைவச் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கடந்த ஒரு வருட காலமாக பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பிணையில் விடுதலை!