Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அரச உள்நாட்டு அலுவல்கள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவரை பிரதமராகவும், இரண்டாவதாக ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவரை உப பிரதமராகவும் நியமித்து இரண்டரை வருடம் தேசிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் கரு ஜெயசூரிய இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றி அமைப்பது குறித்து தேர்தல் ஆணையாளர், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தரப்புக்களுடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

உலகத்தில் எங்கும் இல்லாத அரசியல் முறை, எமது நாட்டில் இன்று ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியமடைகின்றன. எமது நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

100 நாட்களுக்குள் நல்லாட்சியை ஏற்படுத்துவோம். இன்னும் 45 நாட்கள் எஞ்சியுள்ளன. நாம் கொடுத்த வாக்குறுதிகளை இந்த நாட்களுக்குள் நிறைவேற்ற முடியும். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்பும் இந்நாட்டுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதை நிறைவேற்றுவோம்.

அரச அதிகாரிகள் அரசியலில் ஈடபட கூடாது. அரச அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதால் இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியாது. அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சுதந்திரமாக சேவையாற்ற கூடிய முறையை நாம் ஏற்படுத்துவோம். ” என்றுள்ளார்.

0 Responses to சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து ஏப்ரல் 24க்கு முன் பாராளுமன்றத்தை கலைப்போம்: கரு ஜெயசூரிய

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com