இலங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக தீர்வுகள், விருப்பங்கள் நீண்டகாலமாக உதாசீனம் செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாகவே நாட்டில் பலவித மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிளவுபடாத, பிரிவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புக்கள் ஜனநாயக தீர்வின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருமலை மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதியை வரவேற்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்நாட்டில் பதவியிலிருந்த ஜனாதிபதி ஒருவரை ஜனநாயக முறைப்படி முதன் முறையாகத் தோற்கடித்து ஜனாதிபதியானவர் நீங்களே. உங்களுக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்துப் பிரதேச மக்களும் ஆதரவும் பங்களிப்பும் நல்கினார்கள். இதன் ஊடாக நீங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளீர்கள்.
அண்மையில் நடைபெற்ற தேசிய வைபவமொன்றில் பங்குபற்றிய நீங்கள் “வடக்கில் வாழும் மக்களின் உள்ளங்களையும் தெற்கு மக்களின் உள்ளங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இதனை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். இதனை நாம் அடைய வேண்டும். இதற்காகக் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நானும், எனது கட்சியினரும் எம் மக்களும் எம்மால் முடிந்த உதவிகளை செய்தோம்.
இந்நாட்டில் வாழும் எல்லா, இன, மத மக்களையும் ஒன்றிணைத்து நீங்கள் ஆட்சி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். நீண்ட காலமாக இந்நாட்டில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், தமிழ் மக்களும் இந்நாட்டு ஆட்சி முறையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள். அதேநேரம் அண்மைய அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்நாடு சர்வாதிகாரத்தைப் பின்பற்றி ஒரு சர்வாதிகார ஆட்சி உருவாவதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
அந்நிலமை மாற்றப்பட வேண்டும் என்று நாம் கருதினோம். ஆட்சியின் ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்கள் தம் கடமைகளைச் சிறப்பாக ஆற்ற வேண்டும். ஆனால் இந்நாட்டில் ஜனாதிபதி முறைக்கு அப்பால் நிறைவேற்று அதிகார முறை பாராளுமன்ற முறையையும் நீதித்துறையையும் பாதிக்கக் கூடிய வகையில் விளங்கியது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தினதும், மேல் முறையீட்டு நீதிமன்றத்தினதும் நீதிச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. இந்நிலைமை தொடர்ந்திருந்தால் இந்நாட்டு மக்கள் இறைமையை இழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும்.
இப்படியான நிலைமையில் ஜனநாயகம் நிலவ முடியாது. ஜனநாயக விழுமியங்கள் எல்லா நேரங்களிலும் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். அப்போது தான் நாடு முழுமை அடையும். இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களின் ஜனநாயக தீர்வுகள், விருப்பங்கள் நீண்டகாலமாக உதாசீனம் செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாக இந்நாட்டில் பலவித மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும்.
இதனை நாம் அவசியமாகக் கருதுகின்றோம். அதனால் ஒருமித்த, பிளவுபடாத, பிரிவுபடாத நாட்டுக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஜனநாயகத் தீர்வின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியது அவசியம் என நாம் கருதுகின்றோம். இப்பணியில் நீங்கள் விசுவாசமாகவும் உறுதியாகவும் செயற்படுவீர்கள் என நாம் நம்புகின்றோம். உங்களுக்கு திருமலை மாவட்டத்திலுள்ள மூன்று முக்கிய தெய்வங்களின் ஆசியும், சக்தியும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் ஜனநாயக தீர்வுகள், விரும்பங்கள் நீண்டகாலமாக உதாசீனம் செய்யப்பட்டுள்ளன: சம்பந்தன்