வடக்கு பகுதி மக்களின் துயரங்களுக்கு பொறுப்புக்கூறப்படுதல் மூலமாக தீர்வை காணவேண்டும். அதேவேளை, பொறுப்புக்கூறுதல் என்பது வாய்வார்தைகள் அளவில் இல்லாமல் செயற்பாட்டு வடிவில் அமைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உபசெயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தனது அண்மைய இலங்கை விஜயம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
ஜெப்ரி பெல்ட்மன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை அரசாங்கத்துடனும், அதிகாரிகளுடனும் இடம்பெற்ற பேச்சுகள் கடந்த காலத்தில் இடம்பெற்றவைகளைவிட வித்தியாசமானவையாக காணப்பட்டன. இதன் காரணமாகப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை சர்வதேச சமூகத்தின் உதவியுடன் ஏற்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.
வடக்கு பகுதி மக்களின் துயரங்களுக்கு பொறுப்புக்கூறப்படுதல் மூலமாக தீர்வை காணவேண்டும். அதேவேளை இலங்கையின் அனைத்து மக்களும் தங்கள் கரிசனைகளுக்கு தீர்வு காணப்படுகின்றது என கருதும் நிலையை ஏற்படுத்தவேண்டும். இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் உள்ளவர்கள் துயரங்களை அனுபவித்துள்ளனர்.
நான் இலங்கை பயணத்தின்போது அரசாங்கத்துடனான சந்திப்புகளில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கைக்கான ஆதரவை வெளியிட்டேன். இராணுவத்தினரின் பிடியிலுள்ள நிலங்களை விடுவித்தல் போன்ற சாத்தியமான நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துமாறு நான் கேடடுக்கொண்டேன். சர்வதேச விழுமியங்களை பின்பற்றி இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து எனது சந்திப்பில் இலங்கை அரசு உறுதியளித்தது. எனினும் பொறுப்புக்கூறும் விடயத்தில் வெறுமனே வார்த்தைகள் மாத்திரம் போதுமானவையல்ல, பதிலாக நடவடிக்கைகளையே எடுக்கவேண்டியுள்ளது.
சந்தேகத்திற்கு மட்டுமின்றி சமூகங்கள் மத்தியிலும் இலங்கை அரசு குறித்து இன்னமும் நம்பிக்கையின்மை காணப்படுகின்றது. வடக்கில் இந்த சந்தேகமனப்பான்மையை நான் பார்க்க முடிந்தது. வடக்கில் அரசாங்கம் தனது வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவேண்டியுள்ளது.
எனினும், அரசாங்கம் அதனை நிறைவேற்றுவது குறித்த உண்மையான, நேர்மையான விருப்பத்தை கொண்டுள்ளது என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டேன். தேவைப்பட்டால் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் தயாராகவுள்ளது. இது இலங்கை மக்களுக்கு முக்கியமான விடயம்.” என்றுள்ளார்.

0 Responses to பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசு உண்மையாக நடக்க வேண்டும்: ஜெப்ரி பெல்ட்மன்