தற்போதுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றைக்கும் இணங்காது என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விருப்புவாக்கு முறையை ஒழித்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் கலப்பு தேர்தல் முறையொன்றே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் அண்மையில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் அரசியலமைப்பு திருத்தமொன்று இடம்பெற இருக்கிறது. எமது கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாத்திரம் ஒழிப்பதற்கு உடன்படாது தேர்தல் திருத்தமும் அதனுடன் இணைந்து இடம்பெற வேண்டும். இரண்டையும் ஒன்றாக மாற்றுவதாகவே 100 நாள் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.
அரசியலமைப்பு திருத்தத்தை கண்டபடி மேற்கொள்ள முடியாது. அவசர சட்டமூலத்தினூடாக அரசியலமைப்பை திருத்த இயலாது. நாட்டு மக்களுடன் பேச்சு நடத்தி இது தொடர்பில் கருத்தாடலொன்றை செய்தே திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் அவசர சட்டமாக இதனை முன்வைக்க வேண்டாமென அரசாங்கத்தை கோருகிறோம்.
சாதாரண சட்டமூலமாக இதனை சமர்ப்பித்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மக்களின் கருத்தையும் பெற்றே யாப்பு திருத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சி குழு இது குறித்து ஆழமாக ஆராய்ந்து வருகிறது.” என்றுள்ளார்.

0 Responses to தேர்தல் முறையை மாற்றது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சு.க. இணங்காது: நிமல் சிறிபால டி சில்வா