இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அவர் யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, திருகோணமலை, அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.
இந்தியப் பிரதமர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை வருகின்றார். அன்றைய தினமே இலங்கைப் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
அநுராதபுரம் மஹாபோதி விகாரையிலும், கண்டி தலதா மாளிகையிலும் நடத்தப்படவுள்ள விசேட பூசை வழிபாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
1987 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை வரும் முதலாவது இந்தியப் பிரதமர் இவராவார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியா சென்றிருந்த வேளை பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார்.

0 Responses to இலங்கை வரும் மோடி யாழ், மன்னார், கண்டி, திருமலை, அநு’புரம் பகுதிகளுக்கும் செல்வார்!