தேர்தல் முறையில் மறுசீரமைப்பை ஏற்படுத்திய பின்னரே பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறை மறுசீரமைப்பானது, விகிதாசார தேர்தல் முறையும் தொகுதிவாரி தேர்தல் முறையும் சேர்ந்ததொரு கலப்பு தேர்தல் முறையாக அமையும். மறுசீரமைக்கப்படவுள்ள இந்த கலப்பு தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களின் எண்ணிக்கை, ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை வேறுபடுகின்ற போதும் தேர்தல் முடிவுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய கலப்பு தேர்தல் முறை மூலம் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒரு உறுப்பினர் என்ற வகையில் தெரிவு செய்யப்படுவார்கள்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படுமென ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மறுசீரமைப்புக்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பணியை ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணையாளர், நில அளவையாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கமைய தேர்தல் மறுசீரமைப்புக்கான ஏற்பாடுகளை ஓரிரு வாரங்களுக்குள் பூர்த்தி செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்குறுதியளித்துள்ளார். இதேவேளை, அரசியலமைப்புக்கான திருத்தங்கள் பூர்த்தி அடைந்துள்ளதோடு ஆணைக்குழுக்கள் தொடர்பான திருத்த யோசனைகள் இன்னும் ஒரு மாதத்தினுள் முடிவடைந்து விடும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக புதிய தேர்தல் மறுசீரமைப்பினை அமைச்சரவை அங்கீகரிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார்.
முன்னைய அரசாங்கம் அப்போதைய அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் மறுசீரமைப்புக்களை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தீர்மானங்களிலும் மிகவும் நல்லதொரு மறுசீரமைப்பு முறையே அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலேயே விகிதாசார தேர்தல் முறையுடன் தொகுதிவாரி தேர்தல் முறை சேர்ந்ததான புதிய கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணையாளர் நில அளவையாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபருடன் கூடி கலந்துரையாடியுள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to தேர்தல் முறையில் மறுசீரமைப்பை ஏற்படுத்திய பின்னரே பாராளுமன்றத் தேர்தல்: ராஜித சேனாரத்ன