Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழகத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

வாக்காளர்கள் அட்டைகளின் பெயர்களை சரிப்பார்க்கும் பணிகள் குறித்து அனைத்து முக்கியக் கட்சிகளுடன் இன்று சென்னையில் சந்தீப் சக்சேனா ஆலோசனை மேற்கொண்டார்.திமுக, அதிமுக,தேமுதிக உள்ளிட்ட 9 முக்கியக் கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடம்பெற்றன. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சக்சேனா, வாக்காளர் அடையாள அட்டைகளின் பெயர்களை சரிப்பார்த்து சீரமைக்கும் பணிகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து மேற்கொள்ள உள்ளதாகவும்,இதற்கு அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புத் தேவை என்று ஆலோசித்ததாகக் கூறினார்.

மேலும், ஆதார் அடையாள அட்டை எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையையும் சேர்க்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முயற்சி: சக்சேனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com